பட மூலாதாரம், X/@DKShivakumar
-
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கேரளத்தை வெள்ளத்தில் மூழ்கடித்த அதிதீவிர மழைப்பொழிவு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையேயான காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான உடனடிப் பிரச்னையை ஓரளவு தீர்த்து வைத்துள்ளது.
கர்நாடகா “நேற்று பிற்பகல் முதல்” தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் அளவு கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆறு முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்ட இரண்டு மணி நேர அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு அவர் ஊடகங்களிடம் பேசினார்.
ஜூலை 29 முதல் 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பெய்த அதிதீவிர மழைப்பொழிவு, காவிரியின் நான்கு அணைகளுக்கான நீர்வரத்தை அதிகரித்தது.
பட மூலாதாரம், X/@DKShivakumar
கபினி அணையைப் பாதுகாக்க மட்டுமே நீர் திறப்பு
கபினி அணைக்குச் சுமார் 26,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணைக்குச் சுமார் 22,000 கனஅடியும், ஹாரங்கி அணைக்குச் சுமார் 10,440 கனஅடியும், ஹேமாவதி அணைக்குச் சுமார் 11,884 கனஅடியும் நீர் வந்தடைந்தது.
