• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுகவில் பதவியை ஏற்க மறுத்த எஸ்.பி. வேலுமணி அமைச்சர் ஆனந்துடன் சந்திப்பு – தொடரும் உட்கட்சி பிளவின் பின்னணி

Byadmin

Aug 6, 2026


எடப்பாடி பழனிசாமி,  எஸ் பி வேலுமணி

பட மூலாதாரம், SPVelumani/X

படக்குறிப்பு, எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிசாமியுடன்

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அதிமுகவின் தலைமையை எதிர்த்து, மீண்டும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர்.

“பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம்; அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்” என்று எஸ்.பி. வேலுமணி பக்கம் உள்ள அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமானஆனந்தையும் சந்தித்து பேசியுள்ளனர்.

எஸ் பி வேலுமணி

பட மூலாதாரம், SPVelumani/X

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டன. சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக இரு அணிகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தன.

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் புகார் அளித்தது.

மறுபுறம், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அந்தப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

By admin