• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

Women’s Asia Cup T20 இந்தியா-பாகிஸ்தான் மோதல் தேதி அறிவிப்பு: செப்டம்பர் 5ல் துபாயில் பரபரப்பான கிரிக்கெட் டெர்பி

Byadmin

Aug 6, 2026


மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 28 அன்று துபாயில் தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

இந்நிலையில், விளையாட்டில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

By admin