• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

தவெக அரசு திமுக., அதிமுக. திட்டங்களையே மீண்டும் அறிவித்ததா? 8 திட்டங்களின் பின்னணி

Byadmin

Aug 6, 2026



தி.மு.க, அ.தி.மு.க. தவெக

பட மூலாதாரம், TVK HQ/X

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அவர்களின் கட்சிப் பெயரை சேர்த்து ‘வெற்றி’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்” – த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இவ்வாறு விமர்சித்தார்.

இதே கருத்தை முன்வைத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை த.வெ.க அரசு மாற்றியுள்ளதாகப் பேசினார்.

“புதிய அரசு வரும்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வழக்கமான ஒன்று” என, தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் கொண்டு வந்த திட்டங்களில் பெயர் மாற்றம் செய்து புதிய திட்டம் போல த.வெ.க அறிவித்துள்ளதா? நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை புதன்கிழமையன்று நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.

By admin