• Tue. May 5th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

Byadmin

May 5, 2026


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை வருமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்களை ஓரிடத்தில் திரட்ட திட்டம் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. தனித்து 47 இடங்களில் வெற்றி பெற்று 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin