• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு!

Byadmin

Jul 4, 2026


முதல்வர் விஜயை ஒருமையில் விமர்சித்த புகாரில் கைதான திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பேச்சு

சமீபத்தில் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைது

மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

கைதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கண்காளிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ராதாகிருஷ்ணனிடம் கிட்டத்தட்ட 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து அவர் இன்று மதியம் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினார்.

விடுவிப்பு

இதனை தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ரூ.10 ஆயிரம் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

By admin