• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டி சென்று விபத்து – 5 பேர் உயிரிழப்பு

Byadmin

Sep 7, 2026


விபத்துக்குள்ளான விமானம்

பட மூலாதாரம், EPA

அமேசான் ஏர் சரக்கு விமானம் ஒன்று மயாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் கடுமையாக காயமடைந்தனர்.

போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள லுயிஸ் முனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 767-300 சரக்கு விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு மியாமியில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நடந்தது. தரையில் இருந்த பல வாகனங்களின் மீதும் விமானம் மோதியது.

இந்தச் சம்பவம் குறித்து “உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணியாற்றி, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முயன்று வருகிறோம்” என்று அமேசான் தெரிவித்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து புகை எழுந்துக் கொண்டிருந்ததால் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதையடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் அனைத்து விமானங்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த விபத்து, ஆண்டின் மிகப் பரபரப்பான பயண காலங்களில் ஒன்றான லேபர் டே விடுமுறை வார இறுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான சரக்கு விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விபத்துக்குள்ளான சரக்கு விமானம்

“குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்” என்று மயாமி-டேட் கவுன்ட்டி மேயர் டேனியெல்லா லெவின் காவா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

By admin