• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் ஊபெர் நிறுவனம் இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.383 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு – என்ன நடந்தது?

Byadmin

Sep 20, 2026


எமிலி நார்மண்டின்-பார்க்கர்

பட மூலாதாரம், Panish, Shea, Ravipudi

படக்குறிப்பு, எமிலி நார்மண்டின்-பார்க்கர்

கலிபோர்னியா நெடுஞ்சாலையில் 23 வயது பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரை காரில் இருந்து இறங்குமாறு ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 383 கோடி) இழப்பீடு வழங்க ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட் 12 அன்று, வீட்டுக்குச் செல்வதற்காக எமிலி நார்மண்டின்-பார்க்கர் தனது தோழியுடன் ஊபர் காரை முன்பதிவு செய்திருந்தார். அப்போது அவரது தோழிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காருக்கு உள்ளேயே வாந்தி எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மது அருந்தியிருந்த அந்த இரு பெண்களையும் ஓட்டுநர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, காரில் இருந்து இறங்குமாறு வற்புறுத்தியதாக எமிலியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு எமிலி மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

ஓட்டுநர் ஒர் ஒப்பந்ததாரர் என்றும், அவரது செயல்களுக்கு ஊபர் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும் அந்த நிறுவனம் வாதிட்டிருந்தது.

‘பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டுசெல்ல ஊபரை நம்பினோம்’

“ஊபர் பயணிகளிடம் என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறதோ, அதை எமிலி செய்தார். வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற பொறுப்பான முடிவை அவர் எடுத்தார். அவரைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஊபரை நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கை எங்கள் மகளின் உயிரைப் பறித்துவிட்டது” என்று கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சலிஸ் வளாகத்தில் படித்துப் பட்டம் பெற்ற தங்கள் மகள் குறித்து எமிலியின் பெற்றோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

By admin