• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் எரிமலை குழிக்குள் விழுந்து, ஓர் இரவை கடந்து உயிருடன் மீண்ட நபர் – எப்படி?

Byadmin

Jul 27, 2026


2023 ஜனவரி 6 அன்று கிலாவியா எரிமலையின் ஹலிமாவுமாவ் குழியிலிருந்து லாவா வெடித்துச் சிதறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023 ஜனவரி 6 அன்று கிலாவியா எரிமலையின் ஹலிமாவுமாவ் குழியிலிருந்து லாவா வெடித்துச் சிதறுகிறது.

பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானம், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்குள் திடீரென மோதி விழுவது பேரபாயம்! ஆனால், அதைவிடவும் கொடூரமான ஒன்று விமானத்தில் இருந்தவர்களுக்கு நடக்க முடியுமா?

நடக்கலாம்! தங்கள் கால்களுக்குக் கீழே எரிமலை குழம்பு கொதித்துக் கொண்டிருக்க அந்த இரவை முழுமையாக அந்த எரிமலைக் குழிக்குள்ளேயே கழிப்பது அதைவிட மோசமானது.

அது 1992 நவம்பர் மாதம். டைட்டானிக் மற்றும் டெர்மினேட்டர் 2 போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்தவரான கிறிஸ் டட்டி, ஒரு புதிய ஹாலிவுட் படத்திற்கான காட்சிகளைப் படம்பிடிக்க அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பிக் ஐலேண்ட் மீது பறந்து கொண்டிருந்தார்.

அவருடன் விமானி கிரேக் ஹோஸ்கிங் மற்றும் கேமரா உதவியாளர் மைக் பென்சன் ஆகியோர் உடன் சென்றனர்.

நீராவி அடர்ந்த மூடுபனிப் படலத்தை ஊடுருவிப் பறந்த அவர்கள், எதிர்பாராத விதமாகப் பாறை மீது மோதினர். அடுத்த கணமே என்ஜின் முற்றிலும் செயலிழக்க, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அந்த எரிமலைக் குழிக்குள் தலைகுப்புற விழுந்தது.

By admin