• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

செம்பருத்தி, மல்லிகை உள்பட நாம் உணவாக பயன்படுத்த ஏற்ற 5 மலர்கள் எவை?

Byadmin

Jul 27, 2026


நாம் உண்பதற்கு ஏற்ற 5 பூக்கள் எவை?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் பலவித பிரச்னைகளுக்கு சிகிச்சையின் ஒருபகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. என்றாலும், பூக்களை நாம் உணவுப்பொருளாக சேர்த்துக்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பூக்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா, அப்படி அதில் என்ன உள்ளது? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரியர் முல்லைநாதன் கூறுகையில், “ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பூக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பூக்களை நாமே உணவின் ஒரு பகுதியாக எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பூவின் எந்த பகுதியை உண்ணலாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சில தாவரங்களின் இலைகள், பூக்களில் நச்சுகள் உள்ளன. அப்படியே எடுத்து சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும். சில தாவரங்களில் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்” என்றார்.

அதேபோன்று, ஒரு பூவை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும் எனக்கூறும் அவர், அளவுக்கதிகமாக எடுத்தால் பக்க விளைவுகள் இருக்கும் என்றார்.

எதையும் எடுத்துக் கொள்ளும் முன்பாக அதன் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறும் பேராசிரியர் முல்லைநாதன், அதனுடன் வேறு ஏதாவது பதப்படுத்தியை சேர்த்து உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

By admin