• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் சோகம்: தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி பி.எச்.டி மாணவர் உயிரிழப்பு!

Byadmin

Aug 8, 2026


யார் இந்த விக்ரம் முபாயி?

ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த விக்ரம், ஒரு திறமையான மலையேற்ற வீரர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர். “அவர் நடக்கக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்தே அவரது தாய் அவருக்கு மலையேற்றப் பயிற்சியைக் கொடுத்தார்” என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகளை பாக்டீரியாக்கள் மூலம் சிதைத்து, பெட்ரோலியத்திற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருளை உருவாக்கும் மிக முக்கியப் பல்லுயிர் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin