• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுவதால் இந்தியாவுக்கு சிக்கலா? ஓர் அலசல்

Byadmin

Jun 22, 2026


இரான், அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரு மத்தியஸ்தராகக் கையெழுத்திடுகிறார்

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரான், அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரு மத்தியஸ்தராகக் கையெழுத்திடுகிறார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

அமெரிக்கா, இரான் இடையே பல மாதங்களாக நீடித்த பதற்றங்களுக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளை நோக்கிய முன்னேற்றம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்குடன் மட்டும் நின்றுவிடாமல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்தையும் பாதித்தது.

உலகின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் ஹோர்மூஸ் நீரிணை குறித்துக் குறிப்பாகக் கவலைகள் அதிகரித்திருந்தன. தற்போது அது இயல்பு நிலையில் செயல்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது எண்ணெய் சந்தைகளுக்குச் சற்று நிம்மதியளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹோர்மூஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தானும் பங்காற்றியுள்ளது. இது அதன் சர்வதேச ராஜதந்திர நிலையை வலுப்படுத்தக்கூடும்.

By admin