• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் போர் நிறுத்தம் தொடர்வது ஏன் கடினம்? 4 முக்கிய விஷயங்கள்

Byadmin

Jun 12, 2026


அமெரிக்க-இரான் போர்நிறுத்தம்,  இரான், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்

பட மூலாதாரம், Atta Kenare / AFP via Getty Images

படக்குறிப்பு, பிராந்திய அளவில் புதிதாக நடத்தப்பட்ட தாக்குதல்களால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அமெரிக்க-இரான் போர்நிறுத்தம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது

    • எழுதியவர், லூயிஸ் பருச்சோ
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான புதிய அச்சுறுத்தல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் மூத்த அதிகாரிகளுக்கு விடுத்துள்ளனர்.

புதன்கிழமை வளைகுடாவில் தனது ஹெலிகாப்டர்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரானிய ராணுவ மற்றும் கண்காணிப்புத் தளங்களைத் தாக்கியதாக அமெரிக்கா கூறியது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல்களை நடத்தியது; மற்றொரு தாக்குதலை தாங்கள் முறியடித்துள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில நாட்களிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

போர்நிறுத்தம் தொடங்கிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் நேரடி மோதல் இதுவாகும். இந்த நிலையில், இரு தரப்பினரும் “தாக்குதல்களை” நிறுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

By admin