• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா, சீனா, ரஷ்யா தங்களுக்குள் முடிவெடுத்தால் இந்தியாவின் பங்கு குறையுமா?

Byadmin

Nov 23, 2026


வல்லரசுகள் தங்களுக்குள் முடிவெடுத்தால் இந்தியா போன்ற நாடுகளின் பங்கு குறையுமா?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். கிரிமியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மூன்று தலைவர்கள் சந்தித்தனர். உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.

நாஜி ஜெர்மனி வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

சோவியத் படைகள் பெர்லினை நெருங்கிக் கொண்டிருந்தன. நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கு எல்லையைக் கடந்திருந்தன.

பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் ஜப்பானை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன.

இந்த சூழலில்தான் அன்றைய உலகின் மூன்று முக்கிய தலைவர்களாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் யால்டா என்ற இடத்தில் சந்தித்தனர்.

By admin