• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

ஆன்லைனில் துப்பறியும் ஆட்டம் ஆடிய சிறுவன் தாயுடன் சேர்ந்து காணாமல் போன சிறுமியை மீட்க உதவிய கதை

Byadmin

Nov 23, 2026


16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப் (இடது), அமங் அஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் அந்தச் சிறுமியைச் சந்தித்தார். பின்னர், காணாமல்போன அந்தச் சிறுமியின் நிலை குறித்து தனது 41 வயதான தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு, 16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப் (இடது), அமங் அஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் அந்தச் சிறுமியைச் சந்தித்தார். பின்னர், காணாமல் போன அந்தச் சிறுமியின் நிலை குறித்து தனது 41 வயதான தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப், கொலராடோ மலைப்பகுதியில் உள்ள தனது குடும்ப வீட்டின் படுக்கையறையில் இருந்தார். அன்றாட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, தனது மடிக்கணினியில் மற்றொரு வீரருடன் அவர் உரையாடத் தொடங்கினார்.

அந்த நபர் ஒரு பதின்ம வயது சிறுமி. இருவருக்கும் இடையே உடனடியாக நல்ல புரிதல் ஏற்பட்டது என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அந்தப் பெண்ணின் பெயர் தனக்குப் பிடித்திருப்பதாக லாண்டன் கூறினார். அது உண்மையான பெயர் அல்ல, வேறு பெயர் என்று அந்தப் பெண் தெரிவித்தார். தான் வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுமி என்றும், தனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில், தனக்கு விருப்பமில்லாத வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், தான் எங்கு இருக்கிறோம் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. அந்த 17 வயது சிறுமி காணாமல் போய் ஓராண்டுக்கும் மேலாகியிருந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லாண்டன், “என்ன செய்வதென்று தெரியாமல் கையறு நிலையில் இருந்ததாக” கூறுகிறார். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உரையாடி மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவிக்க அவர் முடிவு செய்தார். 41 வயதான செவிலியரும் ஐந்து குழந்தைகளின் தாயுமான கிறிஸ்டினா, ஹாலோவீன் நிகழ்ச்சிக்காகத் தனது இளைய குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த போது லாண்டன் அவரிடம் விவரங்களைத் தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் அந்தத் தாயையும் மகனையும் அவரது தோழியை கண்டறியவும், அந்தச் சிறுமியின் தாயாரைத் தொடர்புகொள்ளவும், எஃப்.பி.ஐ (FBI) உடன் இணைந்து செயல்படவும் தூண்டியது — இறுதியில், லாண்டன் அந்தச் சிறுமியின் இக்கட்டான நிலை குறித்து தன் தாயிடம் முதலில் தெரிவித்த 24 மணிநேரத்துக்குள்ளாகவே, அந்த பதின்ம வயது சிறுமி மீட்கப்படுவதை அவர்கள் நேரில் காண முடிந்தது.

By admin