• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

பீகாரில் பிரதமரின் நிகழ்வுக்கான பதாகைகளை கிழித்ததாக நான்கு பேர் கைது

Byadmin

Nov 23, 2026


பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் ‘நிதிஷ் சேது’ பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் பதாகைகளையும் கிழித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராகோபூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (BDO) அளித்த புகாரின் பேரில், 11 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக ருஸ்தம்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெயரை கொண்ட இந்த பாலத்தை, பிரதமர் மோடி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) திறந்து வைத்தார். அவரது வருகையை முன்னிட்டு, பாலத்தின் இருபுறமும் பிரதமர் இடம்பெற்ற சுவரொட்டிகளும் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

நான்கு பேர் கைது:

சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், ஆர்ஜேடி கட்சி கொடிகளை ஏந்திய குழந்தைகள் உட்பட உள்ளூர் மக்கள் சிலர், பிரதமர் மோடி இடம்பெற்றிருந்த சுவரொட்டிகளை கிழித்தெறியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து ஹாஜிபூர் துணை கோட்ட அதிகாரி (SDO) விஷால் குமார் கூறும் போது, “சனிக்கிழமை மாலை ராகோபூர் வட்டார வளர்ச்சி அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

By admin