• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

Byadmin

Nov 23, 2026


றினோன் கழகத்துக்கும் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் பிரதான சுற்றில் மோதிக்கொண்டபோது றினோன் கழகம் 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

பிரதான சுற்றின் ஆரம்பப் போட்டிகளில் அசத்திய றினோன் கழகம் அதன் பின்னர் தடுமாற்றத்துடன் விளையாடியதுடன் இரண்டு தோல்விகளையும் தழுவியது.

அதேவேளை, சுற்றுப் போட்டியின் ஆரம்பத்தில் அப்கன்ட்றி லயன்ஸிடம் படுதோல்வி அடைந்த புளூ ஸ்டார் அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெற்றது.

எனினும் இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தன.

எனவே சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதலாவது வெற்றியை ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு இன்றைய போட்டியில் களம் இறங்கவுள்ளன.

அணிகள் நிலையில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin