• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

IND vs NZ இந்தியா 720 ரன் குவிப்பு: சதம் கண்ட லோகேஷ் ராகுல் தனது பேட்டிங்கில் செய்த மாற்றம் என்ன?

Byadmin

Nov 23, 2026


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் 136 ரன்கள் எடுத்து மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார்.

படக்குறிப்பு, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் 136 ரன்கள் எடுத்து மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார்.

    • எழுதியவர், ஷுபம் கார்க்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“எனது நுட்பத்தை மாற்றுவதற்குப் பதிலாக, சரியான நிலை மற்றும் பேட்டிங் பொசிஷனில் கவனம் செலுத்தினேன். சூழ்நிலைக்கு ஏற்ப என்னைத் தகவமைத்துக் கொள்ள உதவும் ஒரு பொசிஷனை நான் தேடினேன்” என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறினார்.

வெலிங்டனில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் 136 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கினார். நான்கு நாள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா 720 ரன் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. லோகேஷ் ராகுலைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் சதம் விளாசினார். ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், துருவ் ஜூரெல் ஆகியோர் அரைசதம் கண்டனர்.

முதல் இன்னிங்சில் 368 ரன் சேர்த்திருந்த நியூசிலாந்து அணி 352 ரன் பின்தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் சேர்த்திருந்தது. இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 233 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த டெஸ்டில் அடித்த சதத்தின் மூலம் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை ராகுல் பெற்றார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 290 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 136 ரன்கள் எடுத்தார்.

By admin