• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

Byadmin

Sep 12, 2026


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரஷியாவின் கரண் கச்சனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரண் கச்சனாவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 7-6 (9-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் அல்லது பிரான்சிஸ் தியாபே உடன் மோத உள்ளார்.

By admin