• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

‘அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்’ – இடைக்கால தேர்தல் பற்றி இரானில் பேசப்படுவது என்ன?

Byadmin

Nov 5, 2026


இரான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல், குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகள், டொனால்ட் டிரம்ப், முகமது பாகர் காலிபாஃப்

படக்குறிப்பு, அமெரிக்க வாக்காளர்கள் அனுப்பிய செய்தியை இரான் “ஏற்றுக் கொண்டதாக” முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.

    • எழுதியவர், ஹெலன் டேவிட்சன் & டேவிட் கிரிட்டன்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக வாக்களித்து இருப்பதாக இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.

“இந்தச் செய்தியை நாங்கள் வரவேற்கிறோம்” என இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

“மற்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கும், மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதற்காக அமெரிக்க அரசு தனது மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்தால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் எதிர்ப்பின் தீவிரத்தை அப்போது அவர்கள் உணர்வார்கள்” என அவர் எச்சரித்தார்.

இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு, போரும் அதனால் உயர்ந்த பெட்ரோல் விலையும் ஓரளவுக்குக் காரணம் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டார். இருப்பினும், பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல் குறித்து வருத்தம் ஏதுமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள், இரான் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையை மாற்றும் என்று தான் கருதவில்லை என இரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமனெயி தெரிவித்துள்ளார்.



By admin