கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை, 233 சிறுமிகள் உட்பட 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐஸ்க்ரீம், பஞ்சுமிட்டாய் மற்றும் ‘சரவிட்டா’ போன்ற பொருட்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தைகள், உரையாடல்கள் மற்றும் அவர்களின் நட்பு வட்டாரங்களில் ஏற்படும் மாற்றங்களைச் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக கண்காணிக்க வேண்டும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாற்றங்கள், குழந்தைகள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கியுள்ளதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
The post போதைப்பொருள் விநியோகம்: 11,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது! appeared first on Vanakkam London.