• Tue. Apr 21st, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க ராணுவ கப்பல்களை டிரோன் மூலம் தாக்கி இரான் பதிலடி – பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடக்குமா?

Byadmin

Apr 21, 2026


இரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல்

பட மூலாதாரம், US Central Command

படக்குறிப்பு, இரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலில் அமெரிக்க கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கினர்.

    • எழுதியவர், கேத்தரின் ஆம்ஸ்ட்ராங்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் இல்லை என இரான் கூறியுள்ளது.

இந்தநிலையில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறைபிடித்ததை அடுத்து, ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது இரான் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இரானின் அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த டிரோன் தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கை போர் நிறுத்தத்தை மீறுகிறது எனக் கூறி, இரானின் உயர்மட்ட ராணுவக் கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா மத்தியத் தலைமையகம் ஏற்கனவே பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது.

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக வளைகுடா பகுதியில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

By admin