• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு – கைது செய்யப்பட்ட 8 பேரின் பின்னணி

Byadmin

Jul 9, 2026


அயோத்தி ராமர் கோவில், அயோத்தி, ராமர் கோவில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரேர்ணா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் 27 வயதான ரமாசங்கரும் ஒருவர்.

ரமாசங்கரின் தந்தை சத்து லால் மிஸ்ரா ஒரு பூசாரி ஆவார், அவர் அயோத்தியின் பழமையான ஹனுமன் கோவிலில் கீர்த்தனை பாடுகிறார். இந்த சர்ச்சைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார்.

ரமாசங்கரின் குடும்பத்தின் சார்பில் அவருடைய அண்ணி சாதனா மிஸ்ரா மட்டுமே ஊடகங்களுடன் பேசி வருகிறார். இப்போது ஒரே மாதிரியான கேள்விகளுக்குத் திரும்பத் திரும்பப் பதிலளிப்பது அவருக்கும் கடினமாகவேவுள்ளது.

ராமர் கோவிலில் ரமாசங்கருக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அவர், “சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அங்கு கிடைத்தது. அதற்கு முன்பு வீடியோகிராஃபராக இருந்தார். கோவிலில் ரூபாய் நோட்டுகளை எண்ணும் வேலை கிடைத்தபோது, அதற்காக மாதம் சுமார் 16,000 முதல் 17,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. ஆனால் கேமரா வேலை மூலம் அவருக்கு நான்கைந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது” என்று குறிப்பிடுகிறார்.

மேலும், “நாங்களோ அல்லது அவரது தந்தையோ அவரிடமிருந்து ஒருபோதும் பணம் வாங்கவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சொந்த உழைப்பில் வாழவேண்டும் என்றும், எதிர்காலத்திற்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்றுதான் அவரது தந்தை எப்போதும் அவரிடம் கூறுவார்” என்றார்.

By admin