‘கான் சிட்டி’ படத்தின் மூலம் வணிக ரீதியான வெற்றி கணக்கை தொடங்கியிருக்கும் ‘காந்தக்குரலோன்’ அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்- சாண்டி மாஸ்டர் – தேஜு அஸ்வினி – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வி சத்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி வித் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாலிடர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் மற்றும் ரிடாக்டட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. எஸ். சினிஷ் மற்றும் ஜி. ஷன்ஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இவை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தேர்ட் லுக் எதிர்வரும் 10 ஆம் திகதியான நாளை வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
The post நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு appeared first on Vanakkam London.