• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

உலக கால்பந்தின் கோல் இயந்திரம் ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை முறை என்ன? 5 முக்கிய தகவல்கள்

Byadmin

Jul 9, 2026


வைக்கிங் தலைக்கவசம், எர்லிங் ஹாலண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாலண்ட் நார்வே அணியை முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்

    • எழுதியவர், டாரியோ ப்ரூக்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நார்வே அணி கடைசியாக 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றது. அப்போது எர்லிங் ஹாலாண்ட் பிறந்திருக்கக்கூட இல்லை.

ஆனால் இன்று அந்த அணி, ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், 1.94 மீட்டர் உயரமுள்ள இவர், நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் விருதைப் பெற அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே ஆகிய இருவருடன் போட்டியிடுகிறார்.

செனகலுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்த பிறகு ஹாலண்டு சிரித்துக் கொண்டே இவ்வாறு கூறினார்: “எனக்குத் தெரியவில்லை, கோல் அடிப்பதுதான் எனது சிறப்பு என்று நினைக்கிறேன்… அது இயல்பாகவே அப்படி அமைகிறது.”

நார்வே அணி வரலாற்றிலேயே முதன்முறையாக கால் இறுதிக்குத் தகுதி பெற்று ஏற்கெனவே சாதனை படைத்துவிட்டது. எனினும், வரும் 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினால், அது இன்னும் ஒரு மிகப்பெரிய சாதனையாக அமையும்.

By admin