• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

‘தமிழ்நாட்டில் தற்போது குதிரைச் சந்தைக்குத்தான் நல்ல விலைபோகிறது’ – கி.வீரமணி

Byadmin

Jul 9, 2026


தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக்கட்சிகளுக்கு மாறிவருவதை விமர்சித்துள்ள திராவிடக் கழகத் தலைவர் வீரமணி.,

“முன்னரெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை இருக்கும். இப்போதுதான் அண்மையில் குதிரைச்சந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குதிரைச் சந்தை எங்கோ நடக்கவேண்டியது, அரேபியா போன்ற இடங்களில் நடக்கும்.

ஆனால் இப்போது எல்லோரும் பார்க்கக்கூடிய அளவிற்கு, ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் புது வளர்ச்சி வந்துள்ளது. புதிய சந்தைக்கு நல்ல விலை போகிறது. இப்போது மனிதர்களுக்கே அதிகவிலை. மக்களிடம் ஓட்டு வாங்கிய மனிதர்களுக்கு இன்னும் அதிகவிலை.” என தெரிவித்துள்ளார்.

By admin