0
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே (Mark Rutte) தெரிவித்த கருத்துகளை, ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்த ஆக்கிரமிப்பிற்கு வழிவகை செய்வதற்காக தங்களது எல்லைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்கியவர்கள், இந்த தூண்டப்படாத ஆக்கிரமிப்பிற்கும் அதன் கடுமையான விளைவுகளுக்கும் தங்களின் பங்களிப்பிலிருந்து தப்பிக்க முடியாது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் முற்றிலும் அவசியமானவை என்று கூறி, புதன்கிழமை மார்க் ருட்டே அதற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பகாய் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.