யோகி ஆதித்யநாத்
இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, நன்கொடை முறைகேட்டில் எந்தவொரு சாதுவுக்கோ அல்லது துறவிக்கோ தொடர்பிருப்பது கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்
மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தின் பிம்பத்தை சீர்குலைக்க முயல்வதாக யோகி குற்றம் சாட்டினார்.
“எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது. இது அம்பேத்கர் மற்றும் சனாதன உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்.”
ஒரு காலத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் கிருஷ்ணரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள், இன்று நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அயோத்தியின் வீதிகளையும் சரயு நதியையும் ரத்தத்தால் கறைபடுத்திய பாவத்தை செய்தது சமாஜ்வாதி அரசுதான்” என்று சாடினார்.