• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் ஆட்சியின் முதல் 3 மாதத்தில் தவெக நிர்வாகிகளை சுற்றிய 4 முக்கிய சர்ச்சைகள்

Byadmin

Aug 5, 2026


குற்ற வழக்குகளில் த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து கைதாவது ஏன்?

பட மூலாதாரம், @CMOTamilnadu

படக்குறிப்பு, குற்ற வழக்குகளில் த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து கைதாவது ஏன்?

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இந்த காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன.

‘முதல்வர் விஜயால் கீழ்மட்ட அளவில் கட்சியினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என, அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அக்கட்சி நிர்வாகிகள் மறுக்கின்றனர். ‘ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த கட்சியைக் குறைகூற முடியாது’ என அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மண்டல வாரியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை த.வெ.க தலைவர் விஜய் அமைத்திருந்தார்.

‘குழுவின் மூலம் கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனவும் விஜய் எச்சரித்திருந்தார்.

By admin