• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

“அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளுங்கள்; பெண்களின் கண்ணியத்தை சீண்டாதீர்கள்!” – தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்!

Byadmin

Aug 4, 2026


நடிகை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமாகவும் பொறுப்புணர்வுடனும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்களைப் பற்றியோ, பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையிலோ பேசுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகள், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான களம். அது பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல.

By admin