• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

கட்டபொம்மனுடன் நேருக்கு நேர் போரிட்ட எட்டப்பன், துரோகி என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதன் பின்னணி என்ன

Byadmin

Aug 4, 2026


வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டப்பன்

பட மூலாதாரம், Tamil nadu Tourism Development Corporation)

படக்குறிப்பு, வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் எட்டப்பன் என்ற பெயரும் நினைவுக்கு வந்துவிடுகிறது. எட்டப்பன் என்றாலே ‘துரோகம்’ என்ற ஒரு பிம்பம் நிலை பெற்று விட்டது.

சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எட்டப்பன்’ குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், ‘எட்டப்பன் வரலாறு’ குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஆனால், உண்மையில் கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது எட்டப்பன் தானா? என்ற கேள்விக்கு வரலாற்று ஆவணங்கள் தரும் பதில் சமூக பொது எண்ணங்களுக்கு முரணாகவே உள்ளது.

ராகுல் காந்தி பேசியது என்ன?

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. இந்த மசோதா தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் சதித்திட்டம்.” என்று கூறினார்.

“தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிறார்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்குத் துரோகம் இழைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் திட்டங்களுக்கு அவர்கள் துணைபோகிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் 21ஆம் நூற்றாண்டின் ‘எட்டப்பன்கள்’ ஆவர்” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

By admin