• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

அரசு ஊழியர்களுக்காக டேட்டிங் சேவை – சிங்கப்பூர் அறிமுகம் செய்த திட்டம் சர்ச்சையாவது ஏன்?

Byadmin

Oct 3, 2026


21 முதல் 35 வயதுடையோருக்காக ஃபர்ஸ்ட்டேட் என்னும் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    • எழுதியவர், கெல்லி என்ஜி
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அரசு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம், துணை தேடும் (மேட்ச்மேக்கிங்) சேவையைத் தொடங்கியுள்ளது.

நாட்டில் கருவுறுதல் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூர் தனது அரசு ஊழியர்களுக்காக ஒரு துணை தேடும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், 21 முதல் 35 வயதுடையோருக்காக இந்த வாரம் ஃபர்ஸ்ட்டேட் (FirstDate) எனும் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

“டேட்டிங்கில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை” கொண்டிருப்பதாக தெரிவிக்கும் இந்தத் தளம், நோபல் பரிசு பெற்ற ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஓர் அல்காரிமை பயன்படுத்தி, இதில் பங்கேற்போருக்கு ஒரு நேரத்தில் ஒரு சந்திப்புக்கான துணையை இந்தச் சேவை தேர்வு செய்து முன்வைக்கிறது. “தொடர்ந்து ஸ்வைப் செய்வதால் ஏற்படும் சோர்வு இங்கே முடிவுக்கு வருவதாக” அதன் இணையதளம் குறிப்பிடுகிறது.

பங்கேற்பாளர்கள் தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தங்களது விருப்பங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட்டேட் சேவை தொடங்கப்பட்டதற்கு சிங்கப்பூர் மக்களிடையே கலவையான கருத்துகள் வெளியாகியுள்ளன. சிலர் இதை ‘டிஸ்டோப்பியன்’ (இருண்ட எதிர்காலத்தின் அறிகுறி) என்று வர்ணித்த நிலையில், வேறு சிலர் இதை முயன்று பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

By admin