• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

உ.பி: அனுமதி மறுத்த அரசு மருத்துவமனை.. பழங்குடியின பெண்ணுக்கு சாலையில் பிரசவம் அவலம்

Byadmin

Oct 3, 2026


உத்தர பிரதேசத்தில் பழங்குடியின பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் பிரசவம் நடந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் ‘முசாஹர்’ என்ற பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ராணி.

கர்ப்பமாக இருந்த ராணிக்கு கடந்த செப்டம்பர் 30ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ராணி, ‘முசாஹர்’ சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராணியின் குடும்பத்தினர் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர்.

சாலையில் பிரசவம்

ஆனால் அதற்குள் சாலையிலேயே ராணிக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்தது. அவரது உறவினர்கள் ராணியை சுற்றி சேலை துணியை வைத்து தடுப்பு அமைத்து பிரசவம் பார்த்துள்ளனர்.

குழந்தை நல்லபடியாக பிறந்த நிலையில், தாயும், குழந்தையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டம்

சாதியை காரணம் காட்டி அனுமதி மறுத்ததாக மருத்துவமனைக்கு எதிராக ராணியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ ஊழியர்கள் ராணியின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததாகவும், அவரது ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் அளவு குறைவாக இருந்ததால் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் விசாரணையில், சம்பவத்தன்று பணியில் இருந்த டாக்டர் பங்கஜ் குமார் என்பவர் அஜாக்கிரதையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

By admin