• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

அர்கா சஹான்: விதை குறைவு, அதிக சதை, நீண்ட நாள் கெடாமல் இருக்கும் சீதாப்பழம் எப்படி உருவாக்கப்பட்டது?

Byadmin

May 28, 2026


சீதாப்பழம்

பட மூலாதாரம், IIHR Bangalore

படக்குறிப்பு, தண்ணீர் ஊற்றாவிட்டாலும் கூட சீதாப்பழ மரங்களால் பல மாதங்கள் உயிர்வாழ முடியும்

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அசோகா சிவாரெட்டி. தென்னிந்தியாவின் வறட்சி நிலவும் கோலார் மாவட்டத்தில் விவசாயத்தையே வாழ்வாதரமாக கொண்டு வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது.

“இந்த பகுதியில் 60 முதல் 70 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்கிறது. இதனால் விவசாயிகள் 1,300 அடி வரை ஆழ்துளை கிணறுகளை தோண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலான பணம் தண்ணீரைத் தேடியே செலவாகிறது,” என்று அசோகா சிவார்ரெட்டி கூறுகிறார்.

தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது குடும்பம் விவசாயத்தைக் கைவிட்டு 2005-ல் பெங்களூரு நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு காய்கறி கடையைத் தொடங்கியது.

சிவாரெட்டி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளராக மாறினாலும், விவசாயத்தின் மீதான அவரது ஆர்வம் ஒருபோதும் குறையவே இல்லை.

2018-ஆம் ஆண்டில் தங்களுடைய குடும்ப விவசாயத்தை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்த அவர், அதனை மிகவும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் அணுகினார்.

By admin