• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

தவெகவில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சிக்கலா?

Byadmin

May 28, 2026


ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கலா? எடப்பாடி பழனிசாமி தரப்பின் புதிய அஸ்திரம்

பட மூலாதாரம், AadhavArjuna/X

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அ.தி.மு.க தலைமையின் உத்தரவை மீறி த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களில் நான்கு பேரின் ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.

“தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு நிலுவையில் உள்ளபோது அவர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது சட்டத்துக்கு முரணானது” என்கிறார், அ.தி.மு.க சட்டப்பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

இந்த விவகாரத்தில் 2019 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பையும் அ.தி.மு.க மேற்கோள் காட்டியுள்ளது.

தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை அக்கட்சி பெறவில்லை.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன,

By admin