இந்த மனுவின் மீதான விசாரணை, ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மே 27) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-ஐ சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இறைச்சி வெட்டுதல் என்பது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட அனுமதிக்க முடியாது என்றும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.