• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்த பட அப்டேட்

Byadmin

May 28, 2026


சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப் படம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

By admin