• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

அர்ஜென்டினா – எகிப்து ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது? 15 படங்கள்

Byadmin

Jul 8, 2026


நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியர் உடன் எகிப்து வீரர் முகமது சலா பேசுகிறார்.

பட மூலாதாரம், OBERTO SCHMIDT / AFP via Getty Images

படக்குறிப்பு, நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியர் உடன் எகிப்து வீரர் முகமது சலா பேசுகிறார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஃபிஃபா உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக எகிப்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

எகிப்து அணி முதல் முறையாக நாக்-அவுட் சுற்றில் தங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் தருவாயில் இருந்தது.

79-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ ஒரு கோல் அடித்து கோல் வித்தியாசத்தைக் குறைத்தார்.

ஆனால், கால்பந்து ரசிகர்களால் ‘கோட்’ என்று அழைக்கப்படும் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, அடுத்த நான்கே நிமிடங்களில் மற்றொரு கோல் அடித்து ஸ்கோரை 2-2 என சமன் செய்தார்.

அதன்பின்னர், கூடுதல் நேரத்தின் (ஸ்டாப்பேஜ் டைம்) இரண்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.

By admin