• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு – செந்தில்பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்

Byadmin

Jul 8, 2026


தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சட்டப்பேரவைத் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அப்போது அவருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாகவும், மறுத்தபோது மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரது தூண்டுதல் இருந்ததாகக் கூறி, அவர்கள்மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

By admin