• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

'அர்னாப்' புயல்: ஆந்திராவில் சீரமைப்புப் பணிகளுக்கு தெலுங்கானா அரசு ஆதரவு

Byadmin

Oct 29, 2026


‘அர்னாப்‘ புயலால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தும், சாலைகள் சேதமடைந்தும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திர பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்க்க, ஆந்திர பிரதேச எரிசக்தி துறை அமைச்சர் ஜி. ரவி குமாருடன் தொலைபேசியில் உரையாடி, ‘அர்னாப்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு:

இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “புயல் நிவாரண பணிகள் மற்றும் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் ஆந்திர பிரதேசத்திற்கு தேவையான பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி, முழுமையான ஆதரவை அளிப்பதாக தெலுங்கானா உறுதியளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அமைச்சர் ரவி குமார், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தற்போது நடைபெற்று வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகள், மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விக்ரமார்க்கவிடம் விளக்கினார்.

தெலுங்கானாவுக்கு பாராட்டு:

மேலும், மின் விநியோகத்தை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

தெலுங்கானா அரசின் ஆதரவுக்கும், துணை முதலமைச்சர் விக்ரமார்க்கவின் உதவிக்கும் நன்றி தெரிவித்த ரவி குமார், சீரமைப்பு பணிகளுக்காக தனது வளங்களை வழங்க முன்வந்த அண்டை மாநிலத்தின் இந்த செயலை பாராட்டினார்.

By admin