• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

அறிமுகமே இல்லாத இளைஞர்களால் 3 முறை காரால் மோதப்பட்ட மருத்துவ மாணவி – ஆந்திராவில் என்ன நடந்தது?

Byadmin

Aug 8, 2026


மருத்துவ மாணவி பிரியங்கா

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“என் மகள் என்ன பாவம் செய்தாள்? அவளை காரால் மோதிக் கொன்றுவிட்டார்கள். நாளை அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இன்னொருவரை தாக்கினால் என்ன சொல்வது? இத்தகைய அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது,” என்று முதுநிலை மருத்துவ மாணவி பிரியங்காவின் தந்தை வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் 3-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த பிரியங்காவை, ராஜமகேந்திரவரத்தில் (ஆந்திரா) இரண்டு இளைஞர்கள் காரில் பின்தொடர்ந்து மூன்று முறை மோதினர். இதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மூளைச்சாவு நிலையில் உள்ளார். சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை,” என்று வெங்கடேஷ் கூறினார்.

“நான் ஒரு விவசாயி. தெலங்கானாவின் கட்வால் என் சொந்த ஊர். சமீபத்தில்தான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தோம். என் மகள் கடுமையாக உழைத்து முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் பெற்றார். தற்போது முதல் ஆண்டு படித்து வந்தார். அன்று நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார். படம் முடிந்த பிறகு மகள் அழைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால், வேறொருவர் அழைத்து ‘உங்கள் மகளுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்,” என்றார்.

“நாங்கள் உடனடியாக ராஜமகேந்திரவரம் சென்றோம். பின்னர் அவரை வென்டிலேட்டர் உதவியுடன் ஹைதராபாத்திலுள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினோம். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எந்தத் தந்தையும் இவ்வளவு கொடூரமான சூழ்நிலையை எதிர்கொள்ளக் கூடாது,” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

மேலும், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

By admin