எத்தனால் கலந்த E20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்து பிரதமர் இல்லம் நோக்கி ஆகஸ்ட் 4இல் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என மக்கள் மீதான திணிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி ஒருங்கிணைத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே நடந்தது.
இதில் உரையாற்றிய கெஜ்ரிவால், ” E20 கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமருக்கு அனுப்ப மனுவில் கையெழுத்திடுமாறு ஏற்கனவே கோரியிருந்தேன்.
2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணையவழியில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் அச்சு பிரதிகளை எடுத்துள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மதியம் 12:00 மணிக்கு, பிரதமர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மனுவை வழங்க உள்ளேன்.”
இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் தேவையில்லை. காவல்துறையின் தடிஅடிக்கு அஞ்சாத, சிறை செல்லத் தயங்காத 100 தொண்டர்களை மட்டுமே என்னுடன் அழைத்துச் செல்ல உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.