• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பூவரசங்குளம், கற்பிட்டி பகுதிகளில் இருவர் கைது!

Byadmin

Aug 2, 2026


பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூவரசங்குளம் – சோபால புளியங்குளம் பகுதி

பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோபால புளியங்குளம் பகுதியில், 100 கிராம் 310 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி – கரடிப்பண்ணை பகுதி

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிப்பண்ணை பகுதியில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸார் நடத்திய சோதனையின்போது, 433 கிராம் 330 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாலக்குடாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பூவரசங்குளம், கற்பிட்டி பகுதிகளில் இருவர் கைது! appeared first on Vanakkam London.

By admin