• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

Spider-man: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த ‘மோசமான ஐடியா’ தலைமுறைகள் கடந்து சாதிப்பது எப்படி?

Byadmin

Aug 2, 2026


ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்

பட மூலாதாரம், Sony Pictures/IG

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்பைடர்-மேன். 1962ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது வீட்டின் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சியைப் பார்த்தபோது ஸ்டான் லீ மூளைக்குள் உதித்த இந்த சூப்பர் ஹீரோ பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் உலகளவில் தொடர்ந்து ரசிகர்களைக் குவித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால், முதன்முதலாக ஸ்டான் லீ ஸ்பைடர்-மேன் யோசனையைத் தனது பதிப்பாளரான மார்ட்டின் குட்மேனிடம் தெரிவித்தபோது, “தான் கேட்டதிலேயே மிகவும் மோசமான ஐடியா” என்று கூறிப் புறக்கணித்துவிட்டார்.

அதற்குப் பிறகு, தனக்குள் தோன்றிவிட்ட இந்த கதாபாத்திரத்தை வெளியே கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில், அமேசிங் ஃபேன்டஸி #15 என்ற காமிக் இதழின் இறுதிப் பதிப்பில் சாதுர்யமாக நுழைத்துவிட்டார். அந்தப் பதிப்பு முடிவுற இருந்ததால் அவரது செயலை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவுமில்லை.

அந்த இதழ் வெளியாகி சில வாரங்கள் கழிந்தபோது, வாசகர்கள் மத்தியில் இருந்து ஸ்பைடர்-மேனுக்கு கிடைத்த அபரிமிதமான ஆதரவு, அதன் உண்மையான மதிப்பைப் புரிந்துகொண்ட குட்மேன், அந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கென தனி காமிக் இதழை வெளியிட முடிவு செய்தார்.

அதுவரை மக்கள் பார்த்து வந்த சூப்பர் ஹீரோக்களில் இருந்து ஸ்பைடர்-மேன் முற்றிலும் வேறுபட்டவனாக இருந்ததே இத்தனை ஆண்டுகளாகத் தொடரும் வெற்றிக்கான காரணம்.

By admin