ராகுல் பதிவு
மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.
வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.
இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்
மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.