• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமை ஆக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீட்கப்பட்டது எப்படி?

Byadmin

Aug 2, 2026


கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்

”என் மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று சிகிச்சைக்காக சிறிது சிறிதாக ரூ.40 ஆயிரம் வாங்கினோம். அதற்காக ஆம்பூரில் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றோம். ஆனால் 2 ஆண்டுகளாக அங்கு வேலை செய்தும்கூட சம்பளமே தராமல், என்னை, எனது கணவரை, இரண்டு மகன்களை வெளியிலும் விடாமல் வேலை வாங்கினர், அடித்துத் துன்புறுத்தினர். எங்கள் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடுமென்று நினைத்தோம்.”

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஒடுகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை.

ஓராண்டுக்கு முன்பு வரை குடும்பத்துடன் கொத்தடிமையாக இருந்த சங்கீதாவின் குடும்பம் மீட்கப்பட்டு தற்போது அரசின் முயற்சியால் இழப்பீடு பெற்றுள்ளது. அவரது மகன்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

சங்கீதாவின் குடும்பத்தைப் போலவே, ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை கடன் வாங்கியதற்காகப் பல ஆண்டுகளாக கரும்புத் தோட்டத்தில் ஊதியமே இல்லாமல் கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 7 குழந்தைகள் உள்பட 26 பேரை தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் சமீபத்தில் மீட்டனர். இவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த முகவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் இதுபோல சிறு கடன் தொகைக்காகப் பல குடும்பங்கள், விவசாயப் பண்ணைகளிலும், செங்கல் சூளைகளிலும் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வருவதாக தன்னார்வ அமைப்பினர் தகவல் பகிர்கின்றனர்.

By admin