• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

புதிய பொதுத் தேர்வுகள் மசோதா மூலம் வினாத்தாள் கசிவதைத் தடுக்க முடியுமா? ஓர் அலசல்

Byadmin

Aug 2, 2026


மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு நாள் கழித்து, பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026 குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, அந்த மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, அரசு புதிய பொதுத் தேர்வுகள் மசோதாவை (திருத்தம்) நிறைவேற்றியுள்ளது

மக்களவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு நாள் கழித்து, பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா 2026 குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, அந்த மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் கடுமையான தண்டனை மற்றும் விரைவு விசாரணை நீதிமன்றங்களுக்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திலேயே, வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து, “வினாத்தாள் மாஃபியா, வினாத்தாள் கசிவு கும்பல் அல்லது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் எந்தக் கும்பலாக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது” என்று கூறினார்.

கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம் என்ற தனது அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நம்பகமான கல்வி முறையை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணிக் குழுக்களை அமைப்பதாக இருந்தாலும், விரைவு விசாரணை நீதிமன்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், மாநிலங்களின் பரிந்துரைகளைப் பெறுவதாக இருந்தாலும், கல்வித் துறையில் நாடு முழுவதும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்தத் திசையில் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்று பிரதமர் மோதி கூறினார்.

By admin