• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

‘ஆடுகள் இருந்த வீட்டில் உண்ணி கடி’ – 42 நாட்கள் கோமாவில் இருந்த பெண் மீண்டது எப்படி?

Byadmin

Aug 4, 2026


விக்டோரியா ஸ்டெல்லாஸ்

பட மூலாதாரம், Victoria Stellas

படக்குறிப்பு, தனது நோயின் அறிகுறிகள் காரணமாக இரண்டு வேலைகளை இழந்துவிட்டதாகவும், தற்போது வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் விக்டோரியா ஸ்டெல்லாஸ் கூறுகிறார்.

    • எழுதியவர், லீ பூபியர்
    • பதவி, பிபிசி வேல்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதனால் நாள் ஒன்றுக்கு 18 மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ஸ்டெல்லாஸ் , 2019-இல் சிராஸ் தீவுக்குச் சென்றிருந்தபோது காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார்.

பின்னர் வீடு திரும்பியதும், அவருக்கு இரவில் வலிப்புகள் ஏற்படத் தொடங்கின.

அவர் மருத்துவமனைக்குச் சென்றபோதிலும், “யாருக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை”என்பதால், அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் லிவர்பூலில் உள்ள வால்டன் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 42 நாட்கள் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார்.

By admin