• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் ஜங்கரன் விக்கினேஸ்வரனின் நான்கு நூல்கள் வெளியீடு

Byadmin

Aug 3, 2026


அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஜங்கரன் விக்கினேஸ்வரன் எழுதியுள்ள நான்கு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இலண்டனில் நடைபெறவுள்ளது.

Greenford பகுதியில் அமைந்துள்ள All Hallows Community Centre, Elton Avenue, UB6 0PR மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எழுத்தாளரின் புதிய நான்கு படைப்புகளும் ஒரே மேடையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வெளியிடப்படவுள்ள நூல்களில் அரபு வசந்தம்: மற்றமா? ஏமாற்றமா?, உக்ரைன் போரும் ஊடகத் திரிபும், ஈழம் போரில் எழுத்தாயுதம் உள்ளிட்ட சமகால அரசியல், உலக நிகழ்வுகள் மற்றும் ஈழத் தமிழர் அனுபவங்களை மையமாகக் கொண்ட படைப்புகள் இடம்பெறுகின்றன. மேலும் போர்க்களத்தின் பேனாக்கள் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது.

இவ்விழாவிற்கு இலக்கிய ஆர்வலரும் சைவ காப்பாளருமான திரு. சிவா தம்பு அவர்கள் தலைமை தாங்குகிறார். பிரித்தானியாவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில், நூல்களின் உருவாக்கப் பின்னணி, அவற்றின் சிந்தனைப் பரப்பு மற்றும் நோக்கங்கள் குறித்து நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார்.

சமகால உலக அரசியல், மனித உரிமைகள், போர், சமூக நீதி மற்றும் ஈழத் தமிழர்களின் வரலாற்று அனுபவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல்கள், அரசியல் ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களிடையே புதிய கலந்துரையாடல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் இலண்டன் வாழ் தமிழ் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ் இலக்கியத்திற்கும் சமூக-அரசியல் சிந்தனைக்கும் புதிய பங்களிப்பாக அமையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில், இலண்டனிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post இலண்டனில் ஜங்கரன் விக்கினேஸ்வரனின் நான்கு நூல்கள் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin