• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

ஆட்சியமைக்க தயாராகும் தவெக? – ஆலோசனையில் விஜய்

Byadmin

May 4, 2026


தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 109 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் தவெக கட்சி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவெக 7 தொகுதிகளில் 1000-க்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளது. அதே போல் அதிமுகவும் 9 தொகுதிகளிலும், திமுகவும் 7 தொகுதிகளிலும் 1000-க்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளது.

குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள 23 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும். இல்லையென்றால் சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். ஏறக்குறைய ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டதால் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

By admin